கல்வித்துறையின் கலங்கரை விளக்கமாகவும், சிறந்த புவியியல் அறிஞராகவும் திகழ்ந்த பேராசிரியர் எம். எஸ். மூக்கையா இன்று (12.05.2026) காலமானார் என்ற செய்தி கல்விப் புலத்தை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளதென்று இலங்கை கல்வியாளர்கள் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.
கம்பளை புசல்லாவையைப் பிறப்பிடமாகக் கொண்டு, பேராதனை மற்றும் இங்கிலாந்தின் வேல்ஸ் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்று, இலங்கை கல்விப்புலத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்.
வவுனியா இணைப்புக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளர்.
தேசிய சமாதானப் பேரவையின் (NPC) சபை உறுப்பினர்.
புவியியல் துறை சார்ந்த ஆய்வுகளிலும், உயர்கல்வி மேம்பாட்டிலும் ஒரு மாபெரும் ஆளுமையை இன்று கல்விச் சமூகம் இழந்துள்ளது.
அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் மாணவர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
கலாநிதி கருணாகரன்
