ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு எப்படி வாழ்த்துச் செய்தி அனுப்ப முடியும் என்று ஐக்கிய தேசிய கட்சி (யூஎன்பீ) கேள்வி எழுப்பியுள்ளது.
பொதுவாக ஒரு நாட்டின் தலைவர் மற்றொரு நாட்டின் தலைவருக்கு வாழ்த்து அனுப்புவதுதான் நடைமுறை. ஆனால், ஒரு மாநிலத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு எப்படி ஜனாதிபதி வாழ்த்து அனுப்ப முடியும் என்று ஐதேக கேள்வி எழுப்பியிருப்பதாக தி மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது.
அவ்வாறு வாழ்த்துவதென்றால், அசாம், மேற்கு வங்கம் (பீஜேபி) முதலமைச்சர்களுக்கு ஏன் வாழ்த்து அனுப்பவில்லை என்றும் யூஎன்பி கேட்டுள்ளது.
