தித்துவா புயலைப் பயன்படுத்தி இரவோடிரவாக ஹற்றனுக்கு அபகரித்துச் செல்லப்பட்ட நோர்வூட் பிரதேச செயலகத்தை நோர்வூட் நகரத்தை அண்மித்த பகுதியில் அமைக்கக் கோரும் கை எழுத்து இயக்கம் இன்று (25) பொகவந்தலாவ பகுதியில் நடைபெற்றது.
மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபர் மயில்வாகனம் திலகராஜா தலைமையில் கையெழுத்து வேட்டை நடந்தது.
நோர்வூட் பிரதேச செயலகம் நோர்வூட் நிவ்வெளிகம பகுதியிலிருந்து தித்துவா புயலனர்த்த நாளில் இரவோடு இரவாக ஹட்டன் நகருக்கு அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது என்று தெரிவித்த திரு.திலகராஜா,தனது அரங்கம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து களத்தில் இறங்கியிருப்பதாகக் கூறினார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்


