பன்விலை கலாபொக்கை பிரதேச இளைஞர், யுவதிகளின் தொழில் வாண்மையை விருத்தி செய்யுமுகமாகத் தீர்வுகள் அமைப்பின் எற்பாட்டில், கலாபொக்கை பிரஜா சக்தி நிலையத்தில் செயலமர்வொன்று நடைபெற்றது.
பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட இந்தச் செயலமர்வில் சுமார் 35 பேர் கலந்துகொண்டனர். அவர்களுள் மூவர் தெரிவுசெய்யப்பட்டுக் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பன்விலை நிருபர் ம. நவநீதன்



