வெல்லவாயா, வீரசேகரகமவில் கோழிப்பண்ணை நடத்தி வரும் ஒருவரிடமிருந்து ரூ. 15,000 இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக, ஹப்புத்தளை மாவட்ட தொழில் திணைக்களத்தின் தொழில் அதிகாரி ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்த எழுத்துப்பூர்வமான புகாரைத் தொடர்ந்து, 2009 செப்டம்பர் இரண்டாம் திகதி தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் பரிசீலித்த பின்னர், மேல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல், சம்பந்தப்பட்ட நபர் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளார்.
அதற்கிணங்க ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதனை ஒரே நேரத்தில் அனுபவிக்கும் வகையிலும், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா ரூ. 5,000 அபராதமும், அத்துடன் இலஞ்சமாகப் பெற்ற ரூ. 15,000-இற்குச் சமமான கூடுதல் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது.
வி. அருள்செல்வன்
