விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் வழமைக்கு மாறாக மின்சார உற்பத்திக்காகத் திறந்துவிடப்படுவதாக முன்னிலை சோசலிஷ கட்சி குற்றஞ்சாட்டுகிறது.
இந்த செயற்பாட்டால் நுரைச்சோலை மின் நிலையத்தின் மின்னுற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகக் கட்சியின் பிரசாரச் செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தைப் பேணத்தவறுவதால், கண்டி குண்டசாலை, திகன போன்ற பகுதிகளுக்குக் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான குடிநீர் இணைப்புகள் நாளாந்தம் குறைந்த விநியோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக திரு. நாகமுவ தெரிவித்ததாக தி மோர்னிங் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வி. அருள்செல்வன்.
