தெதுறு ஓயாவில் நீராடியபோது மூழ்கி காணாமல் போயிருந்த எண்மரின் (8 பேரின்) சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (17) காலை காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய இருவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
தற்போது அந்த இருவரினதும் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கடவத்தை பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் கொபெய்கனே பகுதியில் உள்ள தமது உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். பின்னர் அந்த வீட்டைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து 15 பேர் கொண்ட குழுவாக தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற போதே இந்தச் சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது
