நுவரெலியா கண்டி பிரதான வீதியில் பம்பரக்கலை PWD வரிசைக் குடியிருப்பு பகுதியில் இன்றிரவு தீ விபத்து ஏற்பட்டு மூன்று வீடுகளும் உடைமைகளும் முற்றாக எரிந்து சாம்பராகி உள்ளன.
அந்தப் பகுதியில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் விரைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். அதே நேரம் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை அறியநுவரெலியா போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கௌசல்யா



