கண்டி பன்விலை ஆகலை தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா உற்சவம் பதினேழாம் திகதி வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், கரகம் பாலித்தல் நிகழ்வுகளுடன் ஆரம்பமாகிறது.
பதினெட்டாம் திகதி சனிக்கிழமை பறவைக்காவடி ஊர்வலம், தீ மிதிப்பு வைபவம் அன்னதான நிகழ்வுகள் என்பன நடைபெறுகின்றன.
பத்தொன்பதாம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேரிலேறி வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருளாட்சி கொடுக்கின்ற நிகழ்வு நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம் பெறுகிறது.
இருபதாம் திகதி திங்கட்கிழமை காவல் தெய்வ வழிபாடு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அன்று மாலை மாவிளக்கு பூசையும் நடைபெறுகிறது.
இருபத்தோராம் திகதி செவ்வாய்க் கிழமை பால் குட பவனி இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.
பன்விலை நிருபர் ம. நவநீதன்


