நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் உள்ள கிறகரி வாவியிலிருந்து மீட்கப்பட்ட சடலத்துக்குரிய ஆடவர் அடையாளம் காணப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கம்பளை நகரை வசிப்பிடமாகக் கொண்ட மொஹமட் முஷாமின் எனவும் இவர் நீண்ட காலமாக நுவரெலியா நகரில் ஹோட்டல்களில் தொழில் புரிந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எனினும், கடந்த மாதம் 27 ஆம் திகதி இவரைக் காணவில்லை என சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படங்களோடு தகவல் பரிமாறப்பட்டது
இவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பதை அறிய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாவியில் படகுச் சவாரியில் ஈடுபட்டிருந்தவர்கள், சடலமொன்று மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் நுவரெலியா பொலிஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டதன் பின்னரே, சடலம் வாவியிலிருந்து மீட்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காகக் கொண்டு செல்லப்பபட்டது.
கௌசல்யா
