கொழும்புவிலிருந்து ஹற்றன் நோக்கி வந்த பஸ், கினிகத்தேனை பகுதியில் அதல பாதாளத்தில் வீழாமல் ஒரு இரும்பு வேலி அரணாக இருந்து காப்பாற்றியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று(04) இடம்பெற்றுள்ளது. கினிகத்தேனை கடவலை பகுதியில் லொறி ஒன்றுக்கு வழிவிடும் நேரத்தில் இந்த அனர்த்தம் ஏற்படவிருந்தது.
ஹற்றனிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் லொறி முன்னால் வந்தபோது பஸ் பாதாளத்தில் விழாமல் நூலிழையில் தப்பியுள்ளது.
அதனால், பஸ்ஸிலிருந்து பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.
அவ்விடத்தில் இரும்பு வேலி மாத்திரம் இல்லையென்றால் பஸ்ஸின் துருமபு மட்டுமே எஞ்சியிருக்கும் என்று தியகலை பகுதியில் உள்ள வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா நிருபர் செ.தி. பெருமாள்
