நோர்வூட் கெசல்கமுவ ஆற்றில் நேற்று குளிக்கச்சென்றபோது காணாமற்போயிருந்த மாணவின் சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டது.
இராணுவ சுழியோடிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (05)02 மணி நேர போராட்டத்தின் பின்னர் மாணவனின் சடலத்தை மீட்னர்.
காசல்ரி நீர்த்தேக்கத்தில் இணையும் கெசல்கமுவ ஓயாவில் நேற்று பிற்பகல் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போனானர்.
இவர் நோர்வூட் தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய வாகீசன் ஆவார் இவர் நோர்வூட் அயரபி தமிழ் வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் பயில்கிறார்.
நேற்று மதியம் கெசல்கமுவ ஓயாவில் உள்ள ‘சில்வர் வாலா’ என்ற இடத்தில் தனது நண்பர்கள் சிலருடன் குளிக்கச் சென்றுள்ளார்.
அங்கு அவர் நீரில் மூழ்குவதைக் கண்ட அவரது நண்பர்கள், அவரைக் காப்பாற்ற கடுமையாக முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அந்த இடத்தின் அதிக ஆழம் காரணமாக, அவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்து, அந்த மாணவர் நீருக்கடியில் மூழ்கிவிட்டார்.
எனினும் நீரிழ் மூழ்கிய சிறுவனை மீட்க முடியாத நிலையில் இன்று (05) இரணுவ சுழியோடியினரை வரவழைத்து ஆற்றுப்பகுதியில் தேடுதல் நடத்திய போது சுமார் 02 மணித்தியாலங்களின் பின்னர் ஆற்றினுள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவித்த நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்.
