உடுதும்பராவிலிருந்து இன்று காலை கண்டிக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து பள்ளேகலை இராணுவ முகாம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவரை மோதி விபத்துக்குள்ளானது.
மாணவர்கள் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்ட நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மாணவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கௌசல்யா.


