கொத்தமலை – ரம்பொடை கேரண்டி எல்லா பகுதியில் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமுற்றனர்.
நேற்று இரவு 12:00 மணி அளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த ஐவர் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் வெளிமடை வைத்தியசாலைக்குச் சென்று மீண்டும் ரம்பொட பகுதியில் உள்ள தமது வீட்டுக்குத் திரும்பியபோது விபத்தில் சிக்கியுள்ளனர்.
சம்பவத்தில் தாய், தந்தை, இரு குழந்தைகள்,மேலும் ஒருவர் என மொத்தமாக 5 பேர் காயம் அடைந்துள்மை குறிப்பிட தக்கது
விபத்து சம்பந்தமான மேலதிக மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
கௌசல்யா



