தலவாக்கலை சின்ன மட்டக்கலை பகுதியைச் சேர்ந்த மர்வின், வேளாங்கண்ணியின் மகள் மேர்சி விவியா, அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற சமூக விஞ்ஞானப் போட்டியில் பங்கேற்றுத் தங்கப்பதக்கம் வென்று சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவியான இவர், தனது திறமையாலும் கடின உழைப்பாலும் இந்த உயரிய வெற்றியைப் பெற்றுள்ளார். செல்வி விவியாவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இவரது இந்த சாதனை, பாடசாலைக்கும், பெற்றோர்களுக்கும், மேலும் முழு சமூகத்திற்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி மேர்சி விவியாவிற்கு மனமார்ந்த பாராட்டுகளும், எதிர்கால கல்விப் பயணத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகளும் தெரிவிக்கப்படுகின்றன.
கௌசல்யா
