நோட்டன்பிரிட்ஜ் ஒஸ்போன் தோட்டத்தைச் சேர்ந்த இருதயம் பத்மினி என்ற தன் மனைவியைக் கடந்த ஜனவரி மாதம் முதல் காணவில்லை என அவர் கணவர் செல்வராஜ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தாயைக் காணவில்லை என அவர் பிள்ளைகளும் பரிதவிப்பதாகத் திரு. செல்வராஜ் தெரிவிக்கின்றார்.
திருமதி பத்மினி பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ 077 816 8188 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
