வவுனியா மாவட்ட ஐயப்ப பிரதம குரு சிவநாதன் மருதலிங்கம் குருசாமி அவர்கள் நேற்று (ஜனவரி 27) இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியா கணேசபுரம் இந்து மயானத்தில் வியாழக்கிழமை (ஜனவரி 29) பிற்பகல் ஒரு மணிக்கு நடைபெறும் என்று மகா குருநாதரின் சிஷ்யர்களில் ஒருவரான கொழும்பு சுரேஷ் சாமி தெரிவித்தார்.
வவுனியாவில் 1991 ஆம் ஆண்டிலிருந்து ஐயப்ப பக்தர்களுக்கு வழிகாட்டியாகவிருந்து நெறிப்படுத்திய மருதை சுவாமி அவர்களின் இறுதிச் சடங்கில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஐயப்ப பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

