றாக்ஷாவை ஶ்ரீ முத்துமாரியம்மன் தேர்த் திருவிழா எதிர்வரும் 17 ஆம் திகதி கோடியேற்றத்துடன் ஆரம்பமாகிறரது.
கண்டி, பன்விலை றாக்ஷாவை தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 71ஆம் ஆண்டு முத்தேர்பவனித் திருவிழ, ஜூலை 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
முத்துமாரியம்மன் ஆலயத்தின் 71ஆவது வருடாந்த முத்தேர்பவனி திருவிழா எதிர்வரும்16ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி, ஜூலை 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை மிக விமரிசையாக நடைபெறும்.
கொடியேற்றமும் கரகம் பாலித்தலும் எதிர்வரும் 17.07.2026 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அன்று காலை 9.00 மணி முதல் மங்கலகரமான சுபவேளையில் கொடியேற்றமும் (துவஜாரோகணம்), மாலை 7.30 அளவில் கரகம் பாலித்தலும் நடைபெறும்.
தொடர்ந்து வரும் நாள்களில் தினமும் காலை,மாலை வேளைகளில் விசேட அபிஷேகங்கள், வசந்தமண்டப பூசைகள், சுவாமிஉள்வீதி உலா அன்னதானங்கள் ஆலய நிர்வாகத்தினராலும், உபயகாரர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்: ஓப்பநாயக்கா, உணுவலை ஶ்ரீ வடபத்திர காளியம்மன் ஆடிப்பூரத் திருவிழா
17.07.2026 வெள்ளிக்கிழமை கொடியேற்றம், கரகம் பாலித்தல் வைபவமும் 25.07.2026 சனிக்கிழமை பறவைக் காவடி, கரகாட்டம்,கலை நயம் மிக்க பக்தி நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
26.07.2026 ஞாயிற்றுக்கிழமை விசேட வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து, மாலை 6.00 மணியளவில் ஸ்ரீ விநாயக பெருமான், ஸ்ரீ முத்துமாரியம்பாள், ஸ்ரீ முருகப்பெருமான் ஆகிய முப்படை மூர்த்திகளின் முத்தேர் பவனி நடைபெறும்.
அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்களில் எழுந்தருளி, பன்விலை நகரின் முக்கிய வீதிகளினூடாகப் பவனி வந்து, றாக்ஷாவை ஶ்ரீ முத்துமாரியம்மன் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.
27.07.2026 திங்கட்கிழமை தீர்த்தோற்சவம், கரகம் கலைத்தல், மஞ்சள் நீராட்டு விழா என்பன நடைபெறும.
28.07.2026 செவ்வாய்க்கிழமை வைரவர் பூஜையுடன் விழா நிறைவுபெறும்.
இந்த வருடாந்தப் பெருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, அம்பாளின் திருவருளைப் பெற்றுய்யுமாறு ஆலய நிருவாக சபையினர் அன்போடு அழைக்கின்றனர்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
