அரசன்’ படத்தில் சிம்புவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் ‘அரசன்’. தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 24ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. இதற்கு வேல்ஸ் நிறுவனம் – சிம்பு இருவருக்கும் இடையேயான பேச்சுவார்த்தையே காரணம் எனக் கூறப்படுகிறது.
தற்போது சிம்புவுடன் ‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘விடுதலை’ படத்திற்குப் பிறகு மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ‘செக்கச் சிவந்த வானம்’ படத்துக்குப் பிறகு சிம்பு – விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கவுள்ளார்கள். சிம்பு இல்லாமல் இதர காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரபல இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பான்-இந்தியா’ திரைப்படம், ‘#PuriSethupathi’யின் முழுப் படப்பிடிப்பும் அதிகாரபூர்வமாக நிறைவடைந்தது.
