150 கோல்கள் அடித்த பிரான்ஸ் அணி கால் பந்து உலகக் கோப்பை போட்டியில் சாதனை படைத்துள்ளது.
பிபா கால்பந்து உலகக் கிண்ண வரலாற்றில் 150 கோல்கள் அடித்து 4ஆவது அணியாக பிரான்ஸ் இந்தப் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த அணிகள் பட்டியலில் 246 கோல்களுடன் பிரேசில் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து 243 கோல்களுடன் ஜெர்மனி 2ஆவது இடத்திலும், 163 கோல்களுடன் அர்ஜென்டினா 3ஆவது இடத்திலும் உள்ளன.
இந்த வரலாற்றுப் பட்டியலில் தற்போது 150 கோல்கள் அடித்த பிரான்ஸ் 4ஆவது அணியாக இணைந்துள்ளது.
இன்று நடைபெற்ற 3ஆவது சுற்று ஆட்டத்தில் பராகுவேவை எதிர்கொண்ட பிரான்ஸ், 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே அடித்த கோலே, உலகக்கோப்பை வரலாற்றில் அந்த அணியின் 150ஆவது கோலாக பதிவானது.
இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி அடுத்த சுற்றுக்கும் முன்னேறி, கோப்பையை வெல்லும் பயணத்தை தொடர்கின்றது.
