நீர்கொழும்பு சிறையில் கைதிகள் மோதல் சம்பவத்தில் இருவர் உயிரிழந்து மேலும் 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கைதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஆரம்பத்தில் 25 பேர் காயமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அப்போது பெண் கைதிகள் சிறைச்சாலை கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இரு கைதிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறைச்சாலையில் நிலவிய பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகளும் பாதுகாப்புப் பிரிவினரும் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
எஸ். ஆர். இரவீந்திரன்
