வார இறுதி நாள்களில் சிவனடி பாத மலைக்கு வரும் யாத்திரிகர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டியுள்ளதாக நல்லதண்ணி நகரில் உள்ள பாதுகாப்புப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தரிசனம் செய்ய வந்தவர்கள் தனியார் பேருந்து,சிறிய ரக வேன்கள், கார்கள், முச்சக்கர வண்டிகள், ஈருருளிகள் போன்ற வற்றுடன் அரச பேருந்துகளிலும் வந்துள்ளனர்.
தனியார் வாகனங்கள் அனைத்தும் நல்லதண்ணி நகரில் உள்ள வாகன தரிப்பிடத்திலும் நல்லதண்ணி நகரில் இருந்து மறே செல்லும் பிரதான சாலையிலும் நல்லதண்ணி நகரில் இருந்து மஸ்கெலியா நகருக்கு வரும் பிரதான சாலையிலும் நிறுத்தி வைக்கப்பட்டு ள்ளன.
2500 வாகனங்களுக்கு மேல் இந்த வார இறுதி நாள்களில் வருகை தந்தள்ளன. நல்லதண்ணி பொலிசார் வருகை தரும் யாத்திரிகர்கள் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்



