எரிபொருள் பெற இன்று (15) முதல் நடைமுறைக்கு வந்த கியூஆர் முறைமை தம்மைப் பெரும் அவதிக்கு உட்படுத்தியிருப்பதாக மஸ்கெலியா ஓட்டோச் சாரதிகள் குமுறுகின்றனர்.
வாராந்தம் தமக்குப் 15 லீற்றர் பெட்ரல் எவ்விதத்திலும் போதாதென்றும் குறைந்தது 30 லீற்றராவது வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடு படும் முச்சக்கர வண்டிகள் அவர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து முச்சக்கர வண்டி சாரதிகள் கூறுகையில் இன்று முதல் QR நடை முறை காரணமாக வாராந்தம் வழங்க படும் 15 லீட்டர் எமக்கு போதுமானது அல்ல. வாராந்தம் எமக்கு குறைந்த பட்சம் 30 லீட்டர் எரிபொருள் வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.
தனியார் பேருந்துகள் ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் அவற்றிற்கான எரிபொருள் நிரப்பிக் கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. தனியார் வாடகை வேன்களுக்கு 40 லீட்டர் எரிபொருள் போதுமான அளவு இல்லை என்று தனியார் வேன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர் வாராந்தம் 80 லீட்டர் எரிபொருள் தேவை என்று கூறுகின்றனர்.
நாங்கள் அன்றாட வாழ்வில் வாகனங்கள் வாடகைக்குச் சென்று அதன் மூலம் கிடைக்கும் வருவாய் வைத்து உணவு வீட்டு வாடகை மற்றும் பாடசாலை செலவு மருத்துவ செலவு வாகன சிலவு போன்ற வற்றை நடத்த வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
