மலையக ஊழியர் சங்கத்தின் மேதினக் கூட்டம் இன்று (01) பசறை பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் ஜெயம் கண்ணா, விஸ்வநாதன் தலைமையில் பொதுச் செயலாளர் கண்மணி சிவநேசனின் வழிநடத்தலில் மேதினக் கூட்டம் நடந்தது.
பாரம்பரிய தப்பு வாத்தியம் முழங்க மலையக ஊழியர் சங்க மேதினப் பேரணி மடுலசீமை சந்தியில் இருந்து பசறை பிரதேச சபை மண்டபத்தை நோக்கி வந்தது.அப்போது முன்னோடி தொழிற்சங்கவாதிகள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
செ. தி. பெருமாள்






