பாலஸ்தீனத்திற்கு சிங்கப்பூர் எப்போதும் ஆதரவு என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மீள உறுதிப்படுத்தியுள்ளார்.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் ஜூலை 20 முதல் 24ஆம் தேதிவரை நடக்கும் ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் 59ஆவது மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.
அவர் பல முக்கிய சந்திப்புகளை நடத்திவருகிறார். அதன் ஒரு பகுதியாக மத்திய கிழக்கு விவகாரங்கள் குறித்து விவாதிக்க, அவர் பாலஸ்தீன ஆணையத்தின் சமூக மேம்பாட்டு அமைச்சர் டாக்டர் சமா ஹமட்டை புதன்கிழமை (ஜூலை 22) சந்தித்தார்.
அச்சந்திப்பில் அவர் பாலஸ்தீனத்திற்கு சிங்கப்பூர் எப்போதும் ஆதரவு என்பதை மீள உறுதிப்படுத்தினார்.
அன்றையதினம் கிழக்காசிய நாடுகளின் பாலஸ்தீன மேம்பாட்டின் ஒத்துழைப்புக்கான மாநாட்டில் அவர் கலந்துகொண்டார்.
இதையும் வாசிக்கலாம்: பிரிட்டனின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம்
அந்த மாநாடு 2013ஆம் ஆண்டு ஜப்பானால் முன்னெடுக்கப்பட்டது. வட்டார நாடுகள் பாலஸ்தீனர்களின் திறன் மேம்பாட்டுக்கு உதவும் இலக்குடன் அந்தத் தளம் ஆசியானின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டது.
பாலஸ்தீன ஆணையத்துக்கு சிங்கப்பூர் வழங்கும் ஆதரவை அவர் அப்போது விளக்கினார்.
அங்குள்ள மக்களின் முன்னேற்றத்துக்கு, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உதவித் தொகுப்புத் திட்டத்தின் வழியாக பெறப்படும் பயிற்சிகள், கல்விப் பயணங்கள், உதவித் தொகைகள் ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.
