ஹற்றன்-கொழும்பு வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்து முடக்கமடைந்தது.
ஹற்றன் கொழும்பு பிரதான சாலையில் இன்று (23) அதிகாலை வேளையில் பாரிய மரம் சரிந்ததால் போக்குவரத்துக்குத் தடை ஏற்பட்டது.
இச் சம்பவம் இன்று 23 ஆம் திகதி அதிகாலை வேளையில் ஹற்றன் கொழும்பு பிரதான சாலையில் மல்லியப்பூ விருந்தினர் விடுதி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பலத்த காற்றினால் இந்த பாரிய மரம் வீதியின் குறுக்கே சரிந்து விழுந்தது. இதனால் ஹற்றன் கொழும்பு, ஹற்றன் கண்டி செல்லும் வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபை, ஹற்றன் பொலிசார் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
மலையக நிருபர் செ. தி. பெருமாள்
