மஸ்கெலியா சாமி மலை ஓல்ட் டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் 9 சிறுவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதில் பத்துப்பேரும் சிறு காயங்களுக்குள்ளாகினர்.
விளையாட்டுப் போட்டிகளில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த 12,13 வயது உடைய 5 சிறுமிகள் 4 சிறுவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இவ்வனர்த்தத்தின்போது சிறு சிறு காயங்களுக்கு உள்ளான 9 சிறார்களையும் முச்சக்கர வண்டி சாரதியையும் வான் ஒன்றில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள் ஊரவர்கள்.
10 பேரும் ஆபத்து எதுவும் இன்றிக்காப்பாற்றப்பட்டதாக அப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்தனர்.
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்
