நாவலப்பிட்டி நகரில் இன்று 21 ஆம் திகதி மதியம் கன மழை காரணமாக பஸ் நிலைய பகுதியிலும் நாவலப்பிட்டி கண்டி வீதியிலும் சுமார் ஓர் அடிக்கு மேல் மழை நீர் தேங்கி நிற்பதைக் காணக்கூடியதாக இருந்தது.
பஸ் நிலையம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குள்ளும் மழைநீர் புகுந்ததுள்ளது. அப்போது பயணிகளும் பாடசாலை மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தொடர்ச்சியாக நாவலப்பிட்டி நகரில் மழை அதிகமாக பெய்யும் வேளைகளில் இவ்வளவு மழை நீர் தேங்கி நிற்கும் அபாயம் உள்ளது.
அதன் காரணமாக நாவலப்பிட்டி நகரில் உள்ள அனைத்து வடிகான்களையும் முறையாக ஆழப்படுத்தி அந்தக் கழிவு நீரை மகாவெலி கங்கைப் பகுதியில் கொண்டு சேர்க்கல வேண்டும் எனப் பாதிக்கப்படும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்


