சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகிறது.
இந்த விஜயம் ஜூன் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் ஈவன் பெபஜோர்ஜியு உள்ளிட்ட பல சிரேஷ்ட அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம்பெறுகின்றனர்.
இலங்கை தற்போது நடைமுறைப்படுத்தி வரும் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் முன்னேற்றம்,அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
