குப்பை அகற்றுவது பற்றி ஆழமான கலந்துரையாடல்!
அம்பகமுவை பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பெருந்தோட்டப் பகுதிகளின் சுகாதாரமேம்பாடு,கழிவகற்றல் தொடர்பாக சபை உறுப்பினர்கள் துறைசார்ந்த அதிகாரியுடன் ஆழமான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.
வட்டவளை சென் எலியால் கிராமத்தில் கழிவகற்றல் முகாமைத்துவ நிலையம் அமைக்கும்போது மக்களுக்கு ஏற்படும் அசெளகரியம் தொடர்பாகவும் மக்களுக்கு கழிவகற்றல், தரம்பிரித்தல்,உள்ளுராட்சி மன்றங்கள் தோட்டப் பகுதிகளிலும் குப்பை சேகரிக்கும் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இன்று (14) அம்பகமுவை பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர் கணேஷ் அவர்களோடு அம்பகமுவை பிரதேசசபை உறுப்பினர்களான இரா.ஜீவன் இராஜேந்திரன்,செ. விக்கினேஸ்வரன் வ. சுவர்ணலதா ஆகியோர் கலந்துரையாடலைமேற்கொண்டனர்
