மலையக பகுதிகளில் உள்ள அனைத்து தேயிலை தோட்டங்கள் தற்போது காடாக மாறிவரும் நிலையில் உள்ளன.
இறுநூற்றி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்ட போது தேயிலை,கோப்பி, இறப்பர், கொக்கோ போன்ற பயனுள்ள பயிர்ச்செய்கை மிகவும் பாதுகாப்பான முறையில் பயிரிட்டு அறுவடை செய்து அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களின் அனைத்து வகையான சேவைகளை செய்து ஒரு அங்குல காணிகளை காடாக்காமல் முறையாக பயன்படுத்தி வந்தனர்.
இக் காலகட்டத்தில் 1972 ஆம் ஆண்டு நாட்டையாண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசு காணி சீர்திருத்த சட்டத்தின் கீழ் 50 ஏக்கர்களுக்கு மேல் உள்ள அனைத்து காணி உரிமையாளர்களிடம் இருந்து அரசு பொறுப்பேற்று அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் என்ற ஐந்து பிரிவுகளாக பராமரித்து வந்தனர்.
குறிப்பிட்ட காலத்தில் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் என்ற ஐந்து பிரிவுகளாக பராமரித்து வரப்பட்ட இந்தத் தோட்டங்கள் அனைத்தும் குத்தகை அடிப்படையில் பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.
இவ்வாறு வழங்க பட்ட பல தோட்டங்களில் உள்ள தேயிலை செடிகளை முறையாக கவனிக்காமல் விட்டதால் அச் செடிகளில் இருந்து தேயிலை கொழுந்து பறிக்கும் நிலை தவறி தற்போது காடாக மாறிவரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
பெருந்தோட்ட கைத்தொழிலில் தற்போது பணி புரிய தொழிலாளர்கள் முன் வருவதில்லை. காரணம் தேயிலை தோட்டங்களில் உள்ள முகாமையாளர்களின் அடாவடித் தனம், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச வேதனம் வழங்க படுவது, நாளாந்தம் அட்டைக் கடி, குளவி கொட்டுக்கு இலக்காகி வருதல், சிறுத்தை தாக்குதல்,புலி கடி மற்றும் விஷபா்பாம்பு கடி போன்ற வற்றை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.
அத்துடன் முறையான குடியிருப்பு வசதிகள் கடந்த காலங்களில் இயங்கியது வைத்திய வசதிகள் தோட்டத்திற்கு ஒரு தேயிலை தொழிற்சாலை, சாலை வசதிகள் போன்றவை அடங்கும்.
காலை 7 மணிக்கு பெண்கள் பணிக்கு சென்றால் மாலை 5 மணி வரை பணிபுரிதல் அக்காலத்தில் இடி மின்னல் மற்றும் கன மழை போன்ற பல்வேறு இன்னலள்களுக்கு முகம் கொடுத்து பறித்து வரும் கொழுந்து கிலோ 22 இருந்தால் மட்டுமே 1550/= .இல்லை எனில் பாதி நாள் வேதனம் தான்.
தற்போதைய அரசாங்கம் கம்பெனி தோட்டாக்களை சார்ந்த தொழிலாளர்களுக்கு 200/= ரூபாய் நாளாந்தம் வழங்கியபோதிலும் தனியார் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு இந்த வேதனம் வழங்க படுவது இல்லை.
இவ்வாறு பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு இன்னலள்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் உள்ளனர்.
பெருந்தோட்ட தேயிலை களை பாதுகாத்து நாட்டின் அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை குறைந்த பட்சம் 2500/= ரூபாவாக அதிகரிக்க வேண்டும்.
தோட்ட முகாமையாளர் என்ற வகையில் அவருக்கு மாளிகை போன்ற வீடு, பயணிக்க கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வாகனம், சாரதி, சமையல் காரர், வீட்டுத் தோட்டம் செய்ய தொழிலாளி, மின்சாரம், சுத்தமான குடிநீர் போன்ற சகல வசதிகளும் வழங்க பட்டு உள்ளன.
அவருக்கு பல லட்சக்கணக்கான ரூபாய் வேதனம் வழங்க பட்ட போதிலும் அவர்கள் மழையில் நனைவதோ குளவி கொட்டுக்கு இலக்காகுவதோ மிருக தாக்குதல் பாம்பு கடிக்கு உள்ளாவதோ குடியிருப்புகள் தாழ் இறக்கம் ஏற்படுவதோ மழைநீர் ஒழுகுவதோ கிடையாது.
ராஜபோக வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
தற்போது மத்திய மலைநாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள பல தோட்டங்களில் தேயிலை செடிகள் அடங்கிய பகுதிகள் காட்டுச் செடி கொடி புற்கள் நிறைந்த நிலையில் உள்ளன. இதனை துப்புரவு செய்து பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலன் பேண வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
