அம்பகமு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கலவல்தெனியா செல்லும் பிரதான சாலையில் நோட்டன் பிரிட்ஜ் நகரத்திற்குச் செல்லும் வீதியில் உள்ள பாலம் ஒன்றில் பாதுகாப்பு அரண் இல்லாத காரணத்தால் பாடசாலைக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், எந்நேரத்திலும் ஆபத்தைச் சந்திக்கும் நிலை உள்ளது.
இது குறித்து அம்பகமுவ பிரதேச செயலாளர்,பிரதேச சபையின் தவிசாளர், சபையின் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் உடன் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்



