விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு முடிவால் கபில் தேவ் அதிருப்தியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய தலைவர் விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு முடிவு தமக்கு அதிருப்தி அளித்ததாகவும், அவர் கோபப்படாமல் இருந்திருக்க வேண்டும் எனவும் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
மேலும் கோலியின் ஆக்ரோஷமான குணத்தை டென்னிஸ் ஜாம்பவான் ஜான் மெக்கன்ரோவுடன் அவர் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
விராட் கோலி கடந்த 2025 மே மாதம் தனது 14 ஆண்டுகால டெஸ்ட் வாழ்க்கையை முடித்துக் கொண்ட நிலையில், அவர் 123 டெஸ்ட் போட்டிகளில் 9,230 ஓட்டங்களும், (30 சதங்கள்),தலைவராக 68 போட்டிகளில் 40 வெற்றிகளையும் பெற்றுத் தந்துள்ளார்.
உடபுசல்லாவை சிவகாந்தனுக்கு இலங்கை கரப்பந்தாட்ட அணியில் வாய்ப்பு
கோலி அவசரப்பட்டு கோபப்படாமல், ஆறு மாதங்கள் அமைதியாக இருந்திருக்க வேண்டும். தேர்வுக்குழுவினர் தேர்வு செய்யாவிட்டாலும், அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி ஓட்டங்கள் குவித்து மீண்டும் அணியில் இடம் பிடித்திருக்க வேண்டும். அவரிடம் இன்னும் டெஸ்ட் விளையாடும் திறனுள்ளது.
கோலியின் ஆக்ரோஷமான குணத்தை டென்னிஸ் ஜாம்பவான் ஜான் மெக்கன்ரோ மற்றும் பாகிஸ்தானின் ஜாவேத் மியான்டட் ஆகியோருடன் கபில் தேவ் ஒப்பிட்டுள்ளார்.
களத்தில் சண்டையிட்டு விளையாடினால் மட்டுமே கோலியின் சிறந்த ஆட்டம் வெளிப்படும் என்றும், அவர் கவாஸ்கர், சச்சின், ட்ராவிட் போன்ற அமைதியான வீரர்களில் இருந்து வேறுபட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது டெஸ்ட் மற்றும் ரி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கோலி, ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார்.
