மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் தொழிலாளியைத் தாக்கிய சின்னதுரை மே 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சின்னதுரை பங்களாவில் பணியாற்றும் காவலாளியைச் சின்னதுரை நேற்று முன்தினமிரவு (05) தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நேற்று (06) செய்த முறைப்பாட்டுக்கிணங்க துரையை மஸ்கெலியா பொலிஸார் கைதுசெய்து இன்று (07) ஹற்றன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது துரையை விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
மஸ்கெலியா பகுதியில் உள்ள ஆர்.பி.கோ. நிறுவனத்திற்குரிய மஸ்கெலியா மொக்கா தோட்ட எடம்ஸ் பீக் பிரிவில் 5 ஆம் திகதி இரவு தோட்ட சின்னதுரை ஒருவரால் தோட்டக் காவலாளி தாக்கப்பட்டார் நேற்று 6 ஆம் திகதி அதிகாலை வேளையில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்த பின்னர் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தொழிலாளி தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து மொக்கா அடம்ஸ்பீக் தொட்டத் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். துரை கைதுக்குப் பின்னர் போராட்டத்தைக் கைவிட்டனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
