மஸ்கெலியா பகுதியில் தொடர் மழை பெய்வதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று 14ஆம் திகதி மாலை முதல் கன மழை பெய்து வருகிறது.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கன மழையுடன் பனி மூட்டம் நிலவுகிறது. காட்மோர், சாமிமலை, பெயர்லோன், மறே, நல்லதண்ணி, ஹப்புகஸ்தனை பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா விசேட நிருபர்
