நுவரெலியா கோர வாகன விபத்தில் தங்கக்கலை யுவதி பரிதாப பலியாகியுள்ளார்.
நுவரெலியா ஹற்றன் பிரதான வீதியில் நானுஓயாவில் இன்று காலை (19) இடம்பெற்ற கோர விபத்தில் 32 வயதுடைய யுவதியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
லிந்துலை தங்கக்கலை தோட்டத்தில் இருந்து நுவரெலியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதி மீது, எதிரே வந்த வான் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.



உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக நுவரலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் இத்தகைய வீதி விபத்துகளைத் தவிர்க்க, வாகனச் சாரதிகள் அதிவேகத்தைக் குறைத்து அதிக அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்த வேண்டும் எனப் பொலிஸாரும் சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாக எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கௌசல்யா
