மஸ்கெலியா பகுதியில் இன்று பிற்பகலிலிருந்து கன மழை பெய்து வருகிறது.
கினிகத்தேன, தியகல, வட்டவளை, ஹட்டன், பொகவந்தலாவை ,நோட்டன், மஸ்கெலியா, நல்லதண்ணி ஆகிய பகுதிகளில் வாகனங்கள் செலுத்துவோர் வாகனங்களில் முகப்பு விளக்கை ஒளிரச் செய்து மிகவும் அவதானமாக செலுத்துமாறு ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மஸ்கெலியா பகுதியில் கன மழை பெய்து வருவதால் சிவனொளிபாத மலைக்குச் செல்லும் யாத்திரிகர்கள் மிகவும் அவதானமாக செல்லுமாறும் சியத்தலகங்குல ஓயாவில் நீராட வேண்டாம் எனவும் நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இன்று 12 ம் திகதி மாலை முதல் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக காட்டாறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் ஆற்றுப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கன மழை பெய்யும் போதும் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடுமையான பணி மூட்டம் காரணமாக வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
பெருந்தோட்ட கிராம மக்கள் நாளை மறுநாள் பிறக்க உள்ள புத்தாண்டை முன்னிட்டு அதிகளவில் நகரில் வந்து தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிச் செல்ல வந்து உள்ளனர்.
கொழும்பு பகுதியில் இருந்து அதிக அளவில் அங்குப் பணிபுரியும் உத்தியோகத்தர் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை முதல் தங்களது வீட்டிற்கு வந்து கொண்டே உள்ளனர்.
மேலும் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தோட்டங்களிலும் மாரியம்மன் ஆலய திருவிழா நடைபெறும். இவ்விழாவில் கலந்து கொள்ளவும் புத்தாண்டை கொண்டாட அதிக அளவில் வருகை தந்து உள்ளனர்.
மஸகெலியா நிருபர் செ. தி.பெருமாள்

