ஏப்பிறல் 18ஆம் திகதி வரை கியூஆர் இல்லாமல் பெட்ரோல் நிரப்பிக்கொள்ள முடியும் என்ற அரசின் அறிவிப்பை உதாசீனம் செய்யும் வகையில், மஸ்கெலியாவில் உள்ள நிரப்பும் நிலையத்தினர் நடந்துகொள்வதாக முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இன்று 12.04.2026 காலை வேளையில் முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் நிரப்பச் சென்ற வேளையில் Qr , இருந்தால் மட்டுமே பெற்றோல் வழங்க படும் என்று அங்குப் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் தெரிவித்ததாக முச்சக்கர வண்டி சாரதிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
காலை வேளையில் அதிக அளவில் முச்சக்கர வண்டிகள் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்குத் தேவையான எரிபொருளைத் தங்களுக்கு வழங்கப்பட்ட Qr, காட்டி பெற்று வந்தனர்.
அரசாங்கம் நேற்று இரவு 12 மணி முதல் பெற்றோல் வாகனங்களுக்கு எதிர் வரும் 18 ஆம் திகதி வரை எவ்விதமான கட்டுபாடும் இல்லை என்று அறிவித்ததாக ஊடகங்களில் அறிவிப்பு விடுத்த போதிலும் மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மட்டுமே இவ்வாறான செயலை செய்து வருகின்றனர் .
இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர், அதிகாரிகள் உடன் கவனம் செலுத்த வேண்டும் எனக்கோரிக்கை விடுக்கப்படுகிறது.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்


