பேராசிரியர் துரைராஜா நினைவு தலைமைத்துவ சவால் -2025 போட்டி நிகழ்ச்சியில் அகில இலங்கை ரீதியில் லெட்சுமணன் புவீந்திரன் மூன்றாமிடத்தில் தெரிவாகியுள்ளார்.
யாழ் சிறகுகள் அமையம் நடத்திய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான பேராசிரியர் துரைராஜா நினைவு தலைமைத்துவ சவால் – 2025 தேசிய மட்ட போட்டி அண்மையில் நடைபெற்றது.
இதில் நாவலப்பிட்டி, கதிரேசன் மத்திய கல்லூரி மாணவனும், ஸ்ரீ கதர்வேலாயுத அறநெறி பாடசாலையின் மாணவனுமான – தரம்10இல் கல்வி கறகும் – செல்வன் லெட்சுமணன் புவீந்திரன் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
மாணவர்களின் ஆளுமையை விருத்தி செய்யும் வகையில் வருடாந்தம் இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதன் வரிசையில் இவ் வருடமும் கடந்த 04.07.2026 அன்று தேசிய ரீதியிலான போட்டியினை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதையும் வாசிக்கலாம்: உடபுசல்லாவை சிவகாந்தனுக்கு இலங்கை கரப்பந்தாட்ட அணிவல் வாய்ப்பு
கட்டுரை, பரீட்சை, நேர்முகத் தேர்வு, விடய ஆய்வு, முன்வைப்பு போன்ற ஆளுமை கூறுகள் பிரதேச மட்டத்தில் இருந்து பரீட்சிக்கப்பட்டு மாவட்ட மட்ட போட்டிக்கு போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
பின்னர் மாவட்ட மட்டத்தில் இருந்தும் மேற்குறித்த அடிப்படையில் ஆளமைப்பண்புகள் பரீட்சிக்கப்பட்டு மாவட்டத்திற்கு ஒரு வெற்றியாளர் தெரிவு செய்யப்பட்ட நிலையிலேயே இறுதி போட்டி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
