பிறவுண்லோ ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு சிவலிங்கம் சிலை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பிறவுண்லோ தோட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முழுமுதற் கடவுள் சிவன் சிலை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பிரதேச சபை பிரதித் தவிசாளர் ராஜ் அசோக் வேண்டுக்கோளுக்கிணங்க கருங்கல்லிலான இரண்டு அடி உயரம் கொண்ட சிவலிங்கம் பீடத்துடனும் ஒரு நந்தி பீடத்துடனும் ஆலய பரிபாலன சபை நிர்வாகத்திடம் நேற்று முன்தினம் (04) மாலை வழங்கப்பட்டது.
தொண்டமானாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள்,தொண்டர்களுடன் நேரடியாக வந்து மஸ்கெலியா பிறவுண்லோ தோட்ட ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வளாகத்தில் சிலைகளை வழங்கினார்.


இதன் காரணமாக இனி வரும் காலங்களில் பிரவுன்லோ தோட்ட மக்கள் தமது ஆலயத்திலேயே சிவ வழிபாட்டை மேற்கொள்ள முடியும்.
எதிர் வரும் மாதங்களில் இந்த ஆலயம் புனருத்தாரணம் நிறைவு பெற்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.இவ்வாறான பெறுமதி மிக்க சிவன் சிலை அன்பளிப்பாக கிடைக்க பெற்ற நிலையில் அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்
