கல்மதுரை தோட்டத்தில் பொறியில் சிக்கிய சிறுத்தைப் புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
திம்புள்ளை-பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள ஸ்டோனி கிளிப் (கல்மதுரை)தேயிலை தோட்டத்தின் தொழிற்சாலைப் பகுதியில் (05) அதிகாலை 05:00 மணியளவில் பொறியில் சிக்கிய சிறுத்தையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்கள் கண்ட சுமார் 08 அடி நீளமுள்ள சிறுத்தைப்புலி (Panthera padus) நுவரெலியா வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, ஒரு புதர் நிறைந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கிய நிலையில் காணப்பட்டது.
அந்தச் சிறுத்தை இன்று (06) அதிகாலை ஒரு மணியளவில் மீட்கப்பட்டு ரந்தெனிகலை கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியில் அந்த அந்தச் சிறுத்தைப்புலி சிக்கியிருந்தது. வனவிலங்கு அதிகாரிகள் ரந்தெனிகலை கால்நடை மருத்துவமனை மருத்துவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்
பின்னர், இன்று (06) அதிகாலை 01:00 மணியளவில் அந்தப் புலி பொறியிலிருந்து விடுவிக்கப்பட்டு ரந்தெனிகலை கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர்
