பயனர் பெயர் வசதி மூலம் மோசடிக்கு வாய்ப்பில்லை என்று வட்சப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
வாட்ஸ்ஆப் நிறுவனம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ள யூஸா்நேம் வசதி, மோசடிக்கு வழிவகுக்கக்கூடும் என்றும், பயனா்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாதவரை இதை அமலுக்கு கொண்டு வரக் கூடாது,
அந்தத் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் இந்திய மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உண்மையில் சம்பந்தப்பட்ட பயனா்தான், அந்தப் பெயரைக் கோருகிறாரா என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே அப்பெயரை மெட்டா வழங்கும். இதனால் போலிக் கணக்கு தொடங்கப்படுவது தடுக்கப்படும்.
மேலும் புதிய வசதி குறித்து 3 நாள்களுக்குள் விளக்கம் தரக் கோரி, வாட்ஸ்ஆப்பின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு மத்திய அரசு புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், வாட்ஸ்ஆப் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: யூஸா்நேம் வசதி தற்போது அமலில் இல்லை. இந்தாண்டு இறுதியில்தான் படிப்படியாக அமலுக்கு வரவுள்ளது.
பயனர் பெயர் வசதி பயனா்களின் பாதுகாப்புக்கும், போலி கணக்கு தொடங்கப்படுவதை தடுக்கவும், மோசடிகள் நடைபெறுவதை தவிா்க்கவும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
பிரபலமான நபா், நிறுவனங்கள் பெயரில் போலி யூஸா்நேமை பெறுவதற்கு தற்போது சிலா் முன்பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தத் தகவலில் உண்மையில்லை. அத்தகைய பிரபலமான பெயா்கள் அனைத்தும் மெட்டா வசமே உள்ளன.
மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க மத்திய அரசு யோசனை
உண்மையில் சம்பந்தப்பட்ட பயனா்தான், அந்தப் பெயரைக் கோருகிறாரா என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே அப்பெயரை மெட்டா வழங்கும். இதனால் போலிக் கணக்கு தொடங்கப்படுவது தடுக்கப்படும்.
வாட்ஸ்ஆப் செயலிக்கு பயனா்கள் நிச்சயம் தங்களது கைப்பேசி எண்ணை உள்ளிட வேண்டும். யூஸா்நேம் வசதியைப் பயன்படுத்தி மோசடிகள் நடைபெறுவதை தடுக்க பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
புதிதாக யாரும் உங்களுக்கு செய்தி அனுப்ப வேண்டுமெனில், உங்களின் சரியான யூஸா்நேமை அவா்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.
அதேபோல், எத்தனை புதிய பயனா்கள் உங்களைத் தொடா்பு கொள்ள வேண்டும் என்ற எண்ணிக்கை கட்டுக்குள் வைக்கப்படும்.
வேறு யாருடைய யூஸா்நேமை பயன்படுத்த திரும்பத் திரும்ப மா்மநபா் முயற்சித்தால், தானாக அது முடக்கப்பட்டுவிடும். யாரும் முதன்முதலில் செய்தி அனுப்பினால், அவா் புதிய பயனரா என்பது திரையில் காட்டப்படும்.
அவருடைய எண், அவா் வெளிநாட்டுக்காரரா, 2 பேரும் ஒரே குழுவில் உள்ளீா்களா என்ற விவரமும் காட்டப்படும். அதை வைத்து நீங்கள் அவருக்கு பதில் அளிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம் என வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.
