இரத்தினபுரி வலய மட்டத்திலான தமிழ் மொழிப் போட்டியும் விழாவும் இரத்தினபுரி அல்மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் வலய உதவி கல்விப்பணிப்பாளர் எஸ். ராஜ்குமார் தலைமையில் இன்று 27 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
இரத்தினபுரி வலயக்கல்விப் பண்பாளர் திருமதி நிலந்தி தயானந்த பிரதம அதிதியாகவும் பெல்மதுளை உதவி கல்விப் பணிப்பாளர் திருமதி சாமனிக்கா,
சபரகமுவை மாகாண உதவி கல்விப் பணிப்பாளர் வீ. சண்முகநாதன், இரத்தினபுரி வலயக்கல்வி உதவிப் பணிப்பாளர் திருமதி பவித்ரா, ஆசிரிய ஆலோசகர் தேவராஜ், நிவித்திகலை வலய உதவி கல்விப் பணிப்பாளர் திருமதி சகுந்தலா ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
விழா ஆரம்பமாவதற்கு முன்னர் அதிதிகள் அனைவரும் கலாசார அழைத்து ஊர்வலமாக வரப்பட்டனர்.இந்நிகழ்ச்சியில் பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.





இரத்தினபுரி எஸ். ஆர்.இரவீந்திரன்

