இந்தியா–இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய–இலங்கை மன்றம் 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை கோரியுள்ளது.
கலை, கலாசாரம், கல்வி, விவசாயம், ஆராய்ச்சி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம், சமூக சேவை, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் குழுக்கள் தங்களது முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா–இலங்கை மன்றத்தின் 2026 திட்ட முன்மொழிவுகள் கோரல்
கருத்தரங்குகள், மாநாடுகள், கண்காட்சிகள், திரைப்பட விழாக்கள், கலாசார நிகழ்வுகள், பயிலமர்வுகள், ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் மொழிபெயர்ப்பு திட்டங்கள் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கான முன்மொழிவுகளும் வரவேற்கப்படுகின்றன.
2026 ஒகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள இந்திய–இலங்கை மன்றத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் இம்முன்மொழிவுகள் பரிசீலிக்கப்படவுள்ளன.
விண்ணப்பப் படிவங்களை India-Sri Lanka Foundation இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் திட்ட முன்மொழிவுகளையும் அடுத்த மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


