11303777 - pretty young woman driving her new car
அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் இன்று (19) முதல் இருக்கைப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் பின்னிருக்கையில் அமர்ந்து பயணிப்போரும் பட்டியை அணிந்து செல்ல வேண்டும். இது சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட விதியாகும்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் இருக்கைப்பட்டி அணிய வேண்டும் என்ற விதி ஒரு வருடத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட போதிலும், சில வாகனங்களில் பின் இருக்கைகளில் பயணிப்பவர்களுக்கான பட்டிகள் இல்லாத காரணத்தினால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதற்கமைய, பின் இருக்கைகளிலும் பட்டிகளைப் பொருத்திக் கொள்வதற்காக வழங்கப்பட்ட ஒரு வருட கால அவகாசம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று (18) நள்ளிரவு முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் இருக்கைப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
