ஹோல்புறூக் த.ம.வி வெள்ளத்தில் மூழ்கியதால் இயல்பு நிலைமை பெரும் பாதிப்படைந்தது.
இன்று தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலய வளாகம் முழுவதும் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளது.
பாடசாலையின் விளையாட்டு மைதானம், வளாகம், பாடசாலைக்கு அண்மையிலுள்ள விவசாயத் தோட்டப் பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பாடசாலையின் இயல்பான செயற்பாடுகளும், மாணவர்கள், பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
கௌசல்யா
