வத்தேகமை கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் ,சிங்கள மொழி மூலப் பாடசாலைகளின் அதிபர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம், முதலுதவி வழங்கல் தொடர்பான இருநாள் செயலமர்வு அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி வத்தேகமை வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி டபிள்யூ. எம். டி. என். குடரத்தினவின் தலைமையில் நடைபெற்றது.
அனர்த்தங்களின் தாக்கத்தை இயன்றளவு குறைப்பது, பாதிக்கப்படு பவர்களுக்கு உடனடியாக முதலுதவி வழங்குவது தொடர்பான பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய அனுபவ பயிற்சிச் செயலமர்வாக இது நடைபெற்றது.
வத்தேகமை கல்வி வலயத்திற்குட்பட்ட 89 சிங்கள மொழி மூலப் பாடசாலைகளின் அதிபர்களும் இருபத்தொன்பது தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் அதிபர்களும் இப்பயிற்சியி கலந்துகொண்டனர்.
தமிழ் மொழி மூலமான பயிற்சிச் செயலமர்வை. கட்டுகஸ்தோட்டை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். எம். ராசிக் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பயிற்சியை நடத்தினார்.மேலும், சென் ஜோன் அம்பியுலன்ஸ் நிறுவனத்தின் உதவி ஆணையாளர் எஸ். சசிகாந்தன் வளவாளராகக் கலந்து கொண்டு முதலுதவி பயிற்சிகளை வழங்கினார்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்



