மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அப்புத்தளை ஹல்துமுல்லை தோட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சவரியார் பிரான்சிஜிஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சடலம் நீதவான் வருகைக்குப் பின்னர் உடற்றுப் பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. மேலதிக விசாரணைகளைத் தலவாக்கலை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கௌசல்யா
