மெராயாவில் அதிரடியாக அப்புறப்படுத்தப்பட்ட கொள்கலன்: பட்டாசு கொளுத்தி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மெராயா நகரில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பலவந்தமாக வைக்கப்பட்டிருந்த கொள்கலன் (கன்ரேனர்) சட்ட ரீதியான நடவடிக்கைகளின் அழுத்தம் காரணமாக இன்று (ஏப்பிறல் 25) அகற்றப்பட்டது.
நீண்டகாலமாக மக்களுக்கும் சாரதிகளுக்கும் பெரும் சிரமத்தை,இம்சையை ஏற்படுத்திய இந்தப் பிரச்சினைக்கு இன்று முடிவுகட்டப்பட்டுள்ளது..
அக்கரப்பத்தனை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் உறுப்பினர்களால் முதலாவது பிரேரணையாக இந்த விடயம் முன்வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளும் அதிகாரப்பூர்வ அழுத்தங்களும் சேர்ந்து என்பிபி உறுப்பினர்களுக்குக் கைகொடுத்துள்ளது.
இந்தக் கன்ரேனர் காரணமாக மெராயா நகரில் போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பு சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நீண்டகாலமாக நிலவி வந்தன. பொதுமக்கள், வியாபாரிகள், சாரதிகள் பலமுறை கோரிக்கை விடுத்திருந்த போதிலும்,செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது.
கன்ரேனர் அகற்றப்பட்டதையடுத்து மெராயா மக்கள் பட்டாசு கொளுத்தி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த இந்தத் தீர்வு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கௌசல்யா




