செல்வி ஜே. ஐஸ்வரியாவின் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று (20) மஸ்கெலியா பிரதேச சபையின் அனுசரணையில் நடைபெற்றது.
மஸ்கெலியா பிஎம்டி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு மஸகெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமை தாங்கினார். மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் பழைய மாணவியான செல்வி ஐஸ்வரியாவின் கவிதை நூல் வெளியீட்டு விழாவிலல்,
மஸ்கெலியா பிரதேச சபையின் உதவி தவிசாளர் கே. விக்னேஸ்வரன், திருமதி சகுந்தலாதேவி (முன்னாள் ஆசிரிய ஆலோசகர்) , ஸ்.பி.பரமேஸ்வரன்( முன்னாள் மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் அதிபர்) திருமதி கே. கிருஸ்ணகுமாரி ( மஸ்கெலியா பொது நூலக பொறுப்பாளர்), இலங்கை வங்கி முகாமையாளர், மக்கள் வங்கி முகாமையாளர், திருமதி புஸ்ப்பராணி அதிபர் (கிளநூகி தமிழ் வித்தியாலயம் சாமி மலை) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மஸ்கெலியா நிருபர்






